என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » தமிழகத்தில் மழை
நீங்கள் தேடியது "தமிழகத்தில் மழை"
தேசிய பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்க வேண்டும் என அமித் ஷாவிடம் டி.ஆர்.பாலு எம்பி கோரிக்கை விடுத்தார்.
புதுடெல்லி:
மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை திமுக எம்பி டி.ஆர்.பாலு சந்தித்து பேசினார். அப்போது தமிழ்நாட்டிற்கு மழை வெள்ள நிவாரணம் வழங்க வலியுறுத்தி கடிதம் கொடுத்தார்.
‘தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் 25 மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 12 மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அக்டோபர் மாதத்தில் சராசரி அளவை விட 52 சதவீதம் அதிகம் மழை பெய்துள்ளது. மழையால் 49 ஆயிரத்து 757 ஹெக்டேரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் சேதம் அடைந்துள்ளன.
தேசிய பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்க வேண்டும். மழை வெள்ள பாதிப்பை சீரமைக்க ரூ.2079 கோடி வழங்க வேண்டும். மழை வெள்ள நிவாரண நிதியாக முதற்கட்டமாக ரூ.550 கோடி வழங்க வேண்டும்’ என கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது.
சேலம், டெல்டா மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த மாதம் 25ம் தேதி பருவ மழை தொடங்கிய நாளில் இருந்து வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்தது. சென்னையில் இயல்பை விட அதிக மழை பெயதுள்ளது.
இந்நிலையில், தெற்கு அந்தமான் மற்றும் அதையொட்டிய கடல் பகுதிகளில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதன் காரணமாக நெல்லை, குமரி மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுபற்றி சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது:-
வடதமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சேலம், டெல்டா மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். சென்னையில் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் கன்னிமார் பகுதியில் 14 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும். தென்மேற்கு வங்கக்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்... எக்ஸ்பிரஸ் ரெயில்களில் பழைய கட்டண நடைமுறை அமலாகிறது
தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. #Rain #TamilNaduRain #HolidayForSchools
சென்னை:
லட்சத்தீவுப் பகுதி மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் 5 நாட்கள் அனேக இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் சில இடங்களில் கன மழையும், ஓரிரு இடங்களில் மிக கன மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னையில் நள்ளிரவு முதல் பல்வேறு பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. அடையாறு , மந்தைவெளி , திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில், நள்ளிரவு சுமார் 20 நிமிடங்கள் வரை மழை பெய்தது. அதேபோல், இன்று காலை மீண்டும் கனமழை பெய்ய துவங்கியது. கிண்டி, எழும்பூர், சென்ட்ரல், பாரிமுனை, அண்ணா சாலை உள்ளிட்ட பகுதிகளில் சிறிது நேரம் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. வானம் தொடர்ந்து மேக மூட்டத்துடன் காணப்படுகிறது.
சேலத்தில் அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, இளையான்குடி ஆகிய பகுதிகளில் நேற்று இரவில் இருந்து மழை பெய்து வருகிறது. மேற்குத்தொடர்ச்சி மலை, கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம், அரக்கோணம், காஞ்சிபுரம், கல்பாக்கம், மாமல்லப்புரம், திருக்கழுக்குன்றம், திருப்போரூர் ஆகிய இடங்களில் மழை பெய்தது.
காரைக்குடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இரவு முழுவதும் மழை பெய்து வருகிறது. தருமபுரி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் பரவலாக விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. வேதாரண்யம், தலைஞாயிறு, கோடியக்கரை, செம்போடை, ஆயக்காரன்புலம், கரியாப்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
கனமழை காரணமாக திருவாரூர், புதுக்கோட்டை, நாகை, சேலம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு சென்று இதர பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் புதுச்சேரி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. #Rain #TamilNaduRain #HolidayForSchools

அதேபோல், புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை, தருமபுரி, சிவகங்கை, திண்டுக்கல், மதுரை, நாமக்கல், திருவாரூர், ஆகிய மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது.
சேலத்தில் அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, இளையான்குடி ஆகிய பகுதிகளில் நேற்று இரவில் இருந்து மழை பெய்து வருகிறது. மேற்குத்தொடர்ச்சி மலை, கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம், அரக்கோணம், காஞ்சிபுரம், கல்பாக்கம், மாமல்லப்புரம், திருக்கழுக்குன்றம், திருப்போரூர் ஆகிய இடங்களில் மழை பெய்தது.
காரைக்குடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இரவு முழுவதும் மழை பெய்து வருகிறது. தருமபுரி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் பரவலாக விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. வேதாரண்யம், தலைஞாயிறு, கோடியக்கரை, செம்போடை, ஆயக்காரன்புலம், கரியாப்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
கனமழை காரணமாக திருவாரூர், புதுக்கோட்டை, நாகை, சேலம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு சென்று இதர பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் புதுச்சேரி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. #Rain #TamilNaduRain #HolidayForSchools
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் இன்று மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:
கேரளாவில் கடந்த ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. தற்போது தென்மேற்கு பருவமழை ஆந்திரா மற்றும் தமிழகத்தில் தீவிரம் அடைந்து இருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரையில் கடந்த 2 நாட்களாக பல இடங்களில் மழை பெய்து கொண்டு இருக்கிறது.
நேற்று முன்தினம் தமிழகத்தில் அநேக இடங்களில் மழை பெய்து இருக்கிறது. இந்த நிலையில் தமிழகத்தில் இன்று (புதன்கிழமை) ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-
தமிழகம், புதுச்சேரியில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும். ஓரிரு இடங்களில் பலத்த காற்றும், இடியுடன் கூடிய மழையும் பெய்வதற்கான வாய்ப்பு அதிகளவில் இருக்கிறது.
சென்னையை பொறுத்தவரையில் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்வதற்கான சூழல் இருக்கிறது. ஜூன் மாதம் 1-ந் தேதி முதல் நேற்று வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 5 செ.மீ. மழை பதிவாகி இருக்க வேண்டும். ஆனால் 8 செ.மீ. வரை மழை பதிவாகி இருக்கிறது. இது வழக்கத்தை விட 57 சதவீதம் அதிகம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் முக்கியமான இடங்களில் பதிவான மழை அளவு வருமாறு:-
திருச்சி மாவட்டம் சமய புரத்தில் 17 செ.மீ., காஞ்சீபுரத்தில் 10 செ.மீ., பூந்தமல்லி, உத்திரமேரூரில் தலா 9 செ.மீ., திருவள்ளூர், செங்கம், லால்குடி, திருத்தணியில் தலா 8 செ.மீ., ஆலங்காயம், பூண்டி, கும்பகோணம், வலங்கைமான், கொடுமுடி, சாத்தனூர் அணை, பாபநாசம், திருச்சி விமானநிலையம், திருவண்ணாமலை, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தலா 7 செ.மீ., கலவை, செய்யாறு, வால்பாறை, வடசென்னை, தர்மபுரி, முசிறி, நத்தம், மாதவரம், புல்லம்பாடியில் தலா 6 செ.மீ. உள்பட அநேக இடங்களில் மழை பெய்து இருக்கிறது. #tamilnews

×

X